search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னார்குடி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கியது
    X
    மன்னார்குடி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கியது

    மன்னார்குடி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கம்

    மன்னார்குடி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வாட்டார் குடியிருப்பு பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் தொடங்கப்பட்டது. தலைமையாசிரியர் பௌலன் தலைமை தாங்கினார். 

    ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மைய செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.

    வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்ரமணியன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் திட்டம் மற்றும் மைய செயல்பாடுகளை விளக்கி பேசினர். 

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றி குழந்தைகளுக்கு கற்பித்தல் செயல்பாடுகளை வழங்க எடுத்துரைத்தனர்.

    கோட்டூர் ஒன்றியத்தில் முதல் கட்டமாக 100 குடியிருப்பு பகுதியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் என நியமிக்கப்பட்டவர்கள் மகிழ்வூட்டும் செயல்பாடுகள், கற்பித்தல் உபகரணங்கள் மூலம் பயிற்சி வழங்குவர்.
    Next Story
    ×