search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னார்குடி"

    • மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்கப்பட்டது.
    • நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    அதன்படி மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தீவனங்கள் (அன்னதானம்) வழங்கப்பட்டது. நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

    மன்னார்குடி அரசினர் மருத்துவமனையில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு டாக்டர்கள் என்.விஜயகுமார், கோவிந்தராஜன், அசோகன் ஆகியோர் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

    மன்னார்குடி சஞ்சீவிராயர் தெருவில் உள்ள சஞ்சீவிராயன் வளாகத்தில் 28 ஏழை ெபண்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கி அன்னதானம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேற்படி விழாக்களில் மிட்டவுன் ரோட்டரி தலைவர் டி.ரெங்கையன், மண்டல இணை இயக்குனர் கால்நடை டாக்டர் ஐ.தனபாலன், மருத்துவமனை டாக்டர் ராகவி, உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார், ரோட்டரி கால்நடை மருத்துவ முகாம்கள் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கால்நடை அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் முன்னாள் தலைவர்கள் கே.திருநாவுக்கரசு, எம்.நடராஜன், ஜி.சிவக்கொழுந்து, ஆர்.மாரியப்பன், உடனடி தலைவர் சி.குருசாமி, என்.சாந்தகுமார், ஆர்.கே.பாலகுணசேகரன், பொருளர் டி.அன்பழகன், ஹரிரவி, பன்னீர்செல்வம், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலர் வி.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ரோட்டரி 2981 மாவட்டத்தில் உள்ள 137 சங்கங்களில் கால்நடைகளுக்கு அன்னதானம் வழங்கிய முதல் சங்கம் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் என்பது குறிப்பிடதக்கது.

    • 200-க்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மணமகள் மற்றும் மணமகனை தேர்வு செய்தனர்.
    • சுயம்வரம் நிகழ்ச்சியில் கால் மற்றும் கைகளை இழந்த மாற்று திறனாளிகள் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நேர்காணல் நடைபெற்றது. மாற்றுதிறனாளிகள் நல சங்கம், தமிழ்நாடு மாற்றதிறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மணமகள் மற்றும் மணமகனை தேர்வு செய்தனர்.

    மாற்றுதிறனாளிகள் நல சங்க தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். மாற்று திறனாளிகள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மசந்திரன், மாநில பொதுசெயலாளர் பொன்னுசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம், மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவரும், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட பா.ஜ.க. தலைவருமான டாக்டர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தன்னார்வலர்கள் நடத்தும் இந்த திருமண சுயம்வரம் நிகழ்ச்சியில் கால் மற்றும் கைகளை இழந்த மாற்று திறனாளிகள் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் பொன்வாசுகிராம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கோபி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் வாசுதேவ் நன்றி கூறினார்.

    ×