என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உயிரிழப்பு
  X
  உயிரிழப்பு

  கிளி ஜோசியர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழவரம் அருகே கிளி ஜோசியர் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
  பொன்னேரி:

  சோழவரம் அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). கிளி ஜோசியர். மது பழக்கத்திற்கு அடிமையான சரவணன் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

  இதில் மனவேதனை அடைந்த அவரது மனைவி கடந்த 26-ந் தேதி 2 குழந்தையுடன் கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் சரவணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

  இந்த நிலையில் சரவணன் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கும், சரவணனின் மனைவிக்கும் தகவல் தெரிவித்தனர்.

  அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் சரவணன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

  அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×