search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை
    X
    நகை

    நகைக்கடன் தள்ளுபடியில் மீண்டும் ஒரு வாய்ப்பு- அமைச்சர் தகவல்

    நகைக்கடன் தள்ளுபடியில், உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் தி.மு.க. வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நகைக்கடன் தள்ளுபடிக்கான பணிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஈடுபட்டது.

    ஏராளமானவர்கள் நகைக்கடன் பெற்று இருப்பதும், முறைகேடு செய்யும் நோக்கத்தில் பலர் நகைக்கடன் பெற்று இருப்பதும் அரசுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதி குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு மாநிலம் முழுவதும் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 13 லட்சத்து 47 ஆயிரம் பேர் நகைக்கடன் ரத்து சலுகையை பெற தகுதி உடையவர்கள் என்று தெரியவந்து உள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நகைக்கடன்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளன.

    * நகைக்கடன் தள்ளுபடியில், உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

    * 48.84 லட்ச நகைக்கடன்களில் 7.65 லட்ச கடன்கள் 40 கிராமிற்கு மேலானவை. 21.63 லட்ச கடன்கள் ஒரே குடும்ப அட்டையில் உள்ளவர்கள் 40 கிராமிற்கு மேல் பெற்றுள்ளனர்.

    * மீதமுள்ள 2.20 லட்ச கடன்கள் முறைகேடாக பெறப்பட்டுள்ளன. 15.2 லட்ச கடன்களில் விதிமீறல்கள் நடந்துள்ளன.

    * 22,52,226 கடன்தாரர்களில் தற்போது 10,18,066 கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானவை.

    * நகைக்கடனில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.

    * சரியான விவரங்கள் அளித்த பின்னர் சரிபார்க்கப்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×