search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    குளித்தலை, நொய்யல் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

    குளித்தலை, நொய்யல் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம், புகளூர் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது கடைக்குள் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடையில் விற்பனை செய்த புகளூர் 4 ரோடு பகுதியை சேர்ந்த இளங்கோவன்(வயது 45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் குளித்தலை சின்னஆண்டார் தெரு மற்றும் குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குளித்தலை சின்னஆண்டார்தெருவில் உள்ள தனது கடையில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி (23), இரும்பூதிபட்டி பகுதியில் தனது கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்ற குளித்தலை அருகே உள்ள சரவனபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சை(37), ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (39) ஆகிய 3 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் கடையில் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×