என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ பெட்டகம் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து வித நோய்களுக்குமான மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
  திருப்பூர்:

  சித்த மருத்துவத்தின் தந்தை அகத்திய மாமுனிவர் அவதரித்த மார்கழி மாத ஆயில்ய நட்சத்திர நாள், தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

  இதையொட்டி சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

  இதில் கோவை, திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் பேசுகையில்:

  கொரோனாவிற்கு பின் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை பலரும் உணர்ந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய மருத்துவ பெட்டக திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

  ஆறு மாதம் குழந்தைகள் முதல் 10 வயது வரை சாப்பிடலாம். தடுப்பூசி போடுவதற்கான அவசியம் இருக்காது. அனைத்து வித நோய்களுக்குமான மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. விரும்புவோர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவை அணுகலாம். 

  எந்தவித பக்கவிளையும் இல்லை. உணவும், மருந்தும் நம் பாரம்பரிய முறையில் எடுத்துக்கொண்டாலே எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றார்.

  நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க நெல்லிக்காய் லேகியம், உரை மாத்திரை அடங்கிய மருந்து பெட்டகங்கள், 150 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்களிடையே மூலிகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 70 அரிய வகை மூலிகை தாவரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

  மருத்துவ மூலப்பொருட்கள் கண்காட்சியில் மகிழம்பூ, சாலாமிசிரி, அதிவிடயம், கோஷ்டம், செவ்வள்ளிக்கொடி, முருக்கன்விதை, ஏழிலைப்பாலை, பொடுதலை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட மூலிகைகள் இடம்பெற்றிருந்தன.
  Next Story
  ×