search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாநகரில் 56 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

    மணிகண்டன் மீது ஏற்கனவே களக்காடு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வரும் வழிப்பறி கொள்ளையர்கள், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தடுத்து நிறுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் வனிதா அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். 

    குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்கள் ஒரு ஆண்டுகள் வெளியே வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் காசிபாளையம் சிட்கோ ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மேற்பார்வையாளர் ராஜபிரகாஷ், ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 350-ஐ கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி எடுத்துச் சென்றார். 

    அப்போது மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நெல்லை மாவட்டம் நாங்குனேரி சிங்கிகுளத்தைசேர்ந்த மணிகண்டன் (வயது 23), ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த குமரேசன் (30) ஆகியோரை நல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மணிகண்டன் மீது ஏற்கனவே களக்காடு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இவர்கள் 2 பேரும் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் உள்ள மணிகண்டன், குமரேசன் ஆகியோரிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 56 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×