என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  எந்திரங்கள் மூலம் சோளத்தட்டை அறுவடை பணிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவசாயிகளின் கவனம் எந்திரங்கள் பக்கம் திரும்பியுள்ளது.சோளத்தட்டு அறுவடைக்கு விதவிதமான எந்திரங்கள் வர துவங்கி விட்டன.
  திருப்பூர்:

  விவசாயிகள் கால்நடை தீவனத்துக்காக புரட்டாசி பட்டத்தில் மானாவாரி நிலங்களில் சோளம் சாகுபடி செய்திருந்தனர். அவை தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. வரும் தை மாதத்தில் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

  மழை ஓய்ந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் அறுவடை பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன் சோளத்தட்டு அறுவடை பணி முழுவதும் ஆட்களை நம்பியே இருந்தது. தற்போது நகரங்களில் தொழிற்சாலைகள் பெருகியதால் விவசாய பணிகளை விட்டு பல்வேறு தொழிலாளர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர்.

  எனவே கூலித் தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கூலியும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளின் கவனம் எந்திரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. சோளத்தட்டு அறுவடைக்கு விதவிதமான எந்திரங்கள் வர துவங்கிவிட்டன. 

  ஆட்கள் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் இதற்காகும் செலவு குறைவு. எனவே பல விவசாயிகள் எந்திரங்களின் உதவியுடன் சோளத்தட்டு அறுவடை பணியை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மானாவாரி பயிராக 1.42 லட்சம் ஏக்கர் பரப்பளலில் சிறுதானிய பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. 

  இதில் பிரதானமாக சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சோளப்பயிர் அபிவிருத்திக்காக தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தில் அவிநாசி வட்டாரத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  இதுகுறித்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:

  ஆரோக்கியமாக வாழ ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும்.  

  ஊட்டச்சத்து மிக்க தானிய அபிவிருத்திக்காக செயல்விளக்க திடல் அமைப்பது, உயர் விளைச்சல் தரக்கூடிய விதைகள் மற்றும் ஒட்டுரக விதை வினியோகம், உற்பத்திக்கான மானியம், நுண்ணூட்டம், உயிர் உரம், களைக்கொல்லி வினியோகம் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

  சின்னேரிபாளையத்தில் சோளம் தொகுப்பு செயல் விளக்க திடல் எக்டருக்கு ரூ. 6,000 மானிய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பார்வையிட்டு தொழில்நுட்பங்களை அறிந்து விளைச்சலை பெருக்கி கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×