என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் கைது - போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்குன்றம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செங்குன்றம்:

  புழல் விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 58). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர்.

  பாஸ்கர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 14 வயது நிரம்பிய அந்த மாணவி கர்ப்பமானார். தற்போது அவர் 7 மாத கர்ப்பமாக உள்ளார்.

  இது பற்றி தெரிந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாதவரம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

  இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போக்சோ சட்டத்தின் கீழ் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  மாணவியை பாலியல் ரீதியாக ஏமாற்றி கர்ப்பமாக்கியது தொடர்பாக பாஸ்கரிடம் விசாரணை நடத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

  சென்னையில் பள்ளி மாணவிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாக அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளன. கொருக்குப்பேட்டையில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  அந்த மாணவி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த நிலையில் விளாங்காடு பாக்கத்தில் மாணவி ஒருவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பது மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

  Next Story
  ×