என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புகார்
  X
  புகார்

  நிதி நிறுவனங்களில் ரூ.56 லட்சம் மோசடி- மேலாளர் மீது புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிதி நிறுவனங்களில் ரூ.56 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக மேலாளர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  நாமக்கல்:

  நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள 2 நிதி நிறுவன பங்குதாரர்கள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

  நாங்கள் 12 பேர் கூட்டாக சேர்ந்து நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறோம். அதில் பெண் பங்குதாரராக இருந்த ஒருவரது கணவரை நிதி சார்ந்த பொறுப்புகளை பார்த்துக் கொள்ள மேலாளராக நியமித்தோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா சூழ்நிலை காரணமாக மாதாந்திர பங்குதாரர்கள் கலந்தாய்வு கூட்டம் சரிவர நடக்கவில்லை.

  இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மேலாளர், 2 நிதி நிறுவனங்களிலும் பல தவணையாக ரூ.56 லட்சத்தை கையாடல் செய்து விட்டார். மேலும் நிதி நிறுவனங்களின் ஆவணங்களையும் எடுத்து சென்று விட்டார். தற்போது நிதி நிறுவன கணக்குகளை சரிபார்த்த போதுதான் இந்த விவரங்கள் எங்களுக்கு தெரிய வந்தது. தற்போது மேலாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே எங்கள் நிதி நிறுவன பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
  Next Story
  ×