search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில துணை பொதுச்செயலாளர் என்.சுந்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற காட்சி
    X
    மாநில துணை பொதுச்செயலாளர் என்.சுந்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற காட்சி

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் - ச.ம.க.,கூட்டத்தில் தீர்மானம்

    100 சதவீத நிர்வாகம் அமைத்து கட்சி கட்டமைப்பை உறுதிபடுத்த வேண்டும்.
    மடத்துக்குளம்:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உடுமலை வெங்கடகிருஷ்ணா ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் மீட்டிங் ஹாலில் நடந்தது.

    கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.டி.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுச் செயலாளர் என்.சுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

    கூட்டத்தில் வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும். 100 சதவீத நிர்வாகம் அமைத்து கட்சி கட்டமைப்பை உறுதிபடுத்த வேண்டும். 

    தொழில் ரீதியாக மக்கள் தென்மாவட்டங்களுக்கு செல்வதால் இரவு நேரத்தில் உடுமலை வழியாக ரெயில் இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் பாலக்காடு - திருச்செந்தூர் வரை புதிய விரைவு ரெயில் ஏற்பாடு செய்த அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கட்சி வளர்ச்சி குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொகுதி, பகுதி, ஒன்றிய, நகர,வார்டு, பேரூராட்சி, ஊராட்சி, கிளைச்செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×