search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரதட்சணை கொடுமை
    X
    வரதட்சணை கொடுமை

    நிலக்கோட்டை அருகே வரதட்சணை கொடுமைப்படுத்திய என்ஜினீயர் உள்பட 4 பேர் மீது வழக்கு

    நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய என்ஜினீயர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள கணவாய்பட்டி ஊராட்சி மேட்டூரைச் சேர்ந்த செல்வக்குமார் மகள் தாரணி (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த அசோகன் மகன் பிரவீன்குமார் (31). இவர் அங்குள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 17-ந்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 136 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள், ரூ.16 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் மேலும் ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு தாரணியை பிரவீன் குமார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

    மேலும் அவரது ஏ.டி.எம். கார்டு உள்பட அனைத்து நகைகளையும் பறித்து வைத்துக் கொண்டு உணவு வழங்காமல் சித்ரவதை செய்துள்ளனர். இது குறித்து தாரணி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் லதா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் பிரவீன்குமார், அவரது தாய் தாமரை (55), உறவினர்கள் சங்கீதா (35), பத்மநாபன் (40) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×