என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  அடுத்த மாதம் தமிழகம் வரும் பிரதமர் மோடி புதுவைக்கும் செல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அடுத்த மாதம் தமிழகம் வரும் பிரதமர் மோடி புதுவையில் தேசிய இளைஞர் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
  சென்னை:

  பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் விருது நகரில் நடைபெறும் விழாவில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

  மோடி தமிழகம் வருகையின்போது புதுவைக்கும் செல்கிறார்.

  சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12-ந் தேதி தேசிய இளைஞர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேசிய அளவிலான இளைஞர்கள் மாநாடும் நடத்தப்படும். இந்த ஆண்டு இளைஞர் தினமான 12-ந் தேதி புதுவையில் தேசிய இளைஞர் தினவிழா நடத்தப்படுகிறது. பிரதமர் மோடியும் புதுவை சென்று இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.

  இதுபற்றி கட்சி நிர்வாகிகள் கூறும்போது, இந்த இரு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி மேலும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் சேரும்போல் தெரிகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. நிகழ்ச்சி இறுதி செய்யப்பட்டதும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றனர்.

  Next Story
  ×