என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விசாரணை
  X
  விசாரணை

  ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பதுக்கிய கும்பல் யார்?- அதிகாரிகள் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போதைப்பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மில்லர்புரம் வீட்டுவசதி வாரிய பகுதியில் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  உடனடியாக அந்த பகுதிக்கு அதிகாரிகள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் 23 பாக்கெட்டுகளில் எபிடிரைன் என்ற போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  அங்கிருந்து சுமார் 23 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 2 கோடி ஆகும். இந்த எபிடிரைன் ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட நோய்களுக்கு மாத்திரை வடிவில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  இவை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே இந்த போதைப்பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதனை இங்கு பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Next Story
  ×