search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதவிதமான ஸ்டார்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    விதவிதமான ஸ்டார்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கிறிஸ்துமஸ்சையொட்டி திருப்பூர் கடைகளில் விதவிதமான ஸ்டார்கள் விற்பனை

    கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் சீரியல் பல்புகள் பல்வேறு வண்ணங்களுடன் கூடிய சிறிய பந்துகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
    திருப்பூர்:

    கிறிஸ்துமஸ்சையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகள், பேன்சி ஸ்டோர்களில் விதவிதமான வண்ணங்களில் வித்தியாசமான வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பனிப்பொழிவுடன் கூடிய ‘சாண்டா கிளாஸ்’ பொம்மை புதிதாக சந்தைக்கு வந்துள்ளது.

    3 அடி உயரத்தில் காற்று அடைக்கப்பட்ட பலூனுக்குள் கிறிஸ்துமஸ் மரம், சாண்டா கிளாஸ் பொம்மையின் தோற்றம், சிறுவர்களை சுண்டி இழுக்கிறது. அதனுள்ளே, சிறு சிறு தெர்மாகோல், பனிபொழிவை நினைவூட்டும் வகையில் பார்வைக்கு ரம்மியமாகவே உள்ளன.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்:

    கிறிஸ்துமஸ் சாண்டா கிளாஸ், கிறிஸ்துமஸ் மரம், குடில் போன்ற அமைப்புடன் கூடிய கேக் வகைகள், ஏர்பலூன் சாண்டா கிளாஸ், பனிபொழியும் சாண்டா கிளாஸ் பொம்மையை பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    முட்கள் போன்ற அமைப்புடன் கூடிய ஸ்டார், வட்ட வடிவத்துடன் ஏராளமான கூம்புகளை கொண்ட டயர் ஸ்டார், பல அடுக்குகளுடன் கூடிய ஸ்டார்கள், பலரையும் ஈர்க்கும் வகையில் உள்ளன. சிறியது முதல், ‘மெகா’ சைஸ் ஸ்டார்கள் வரை விற்பனைக்கு வந்துள்ளன. 

    இவற்றின் விலை ரூ. 20 முதல் ரூ. 400 வரை உள்ளது. கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் சீரியல் பல்புகள், பல்வேறு வண்ணங்களுடன் கூடிய சிறிய பந்துகளும் விற்பனைக்கு வந்துள்ளன என்றார்.
    Next Story
    ×