என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காளிவேலம்பட்டி பிரிவு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  பல்லடம்:

  கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜாய்(வயது55), சிஜூ(22). இவர்கள் இருவரும் பல்லடம் அருகே உள்ள அவரபாளையத்தில் தங்கி அங்கு உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரவு மோட்டார் சைக்கிளில் கோவை சென்று விட்டு பல்லடம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

  கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பிரிவு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  காரை ஓட்டி வந்த விருதுநகரைச் சேர்ந்த அஷ்ரப்(35) படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  Next Story
  ×