search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
    X
    கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் ஸ்மார்ட்சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

    நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்க உடனடியாக ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது. 

    கூட்டத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் இதுவரை நடைபெற்ற வேலை விவரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை திருப்பூர் மாநகராட்சி விரைவுப்படுத்தி பணிகளை முடிக்க வேண்டும்.

    திருப்பூரின் அனைத்து பதிவு அலுவலகங்களிலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதால் திருப்பூரின் தெற்கு பகுதியில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகம் தோற்றுவிக்க வேண்டும்.

    திருப்பூரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், விரைவான தொழில் வளர்ச்சிக்கு சாலை வசதிகள் மேம்படுத்த திருப்பூர் - பல்லடம் சாலை மற்றும் பெருமாநல்லூர் சாலை ஆகியவற்றிற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

    திருப்பூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்க உடனடியாக ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 

    தற்போது மழை அதிக அளவு பொழிந்து இன்று அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீர் வீணாக கடலில் கலந்து வருவதை தடுத்து திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த குளம் குட்டைகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், கதிர்வேல், காடேஸ்வரா தங்கராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, மூத்த நிர்வாகிகள் மு.பழனிச்சாமி, சாமிநாதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி பிரிவு மாவட்ட தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×