என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  வாலிபர் கொலை- குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த எஸ்.ஐ.க்கு பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அவிநாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமல் ஆரோக்கியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
  அவிநாசி:

  அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள ஒரு பாலத்துக்கு அடியில் கடந்த நவம்பர் 21-ந்தேதி  பீகார் மாநிலத்தை சேர்ந்த அனில்குமார்(வயது 22) என்பவர்  மர்மநபர்களால் பலமாக தாக்கப்பட்ட நிலையில்  உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது தொடர்பாக அவிநாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  அமல் ஆரோக்கியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இறந்தவருடன் பணியாற்றி வருபவர்களிடம் விசாரித்ததன் அடிப்படையில் இறந்தவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிந்தது.

  அதன் தொடர் விசாரணையில் இந்த காதல் விவகாரம் பிடிக்காமல் அந்த பெண்ணின் தந்தை ரவிச்சந்திரன், அவருடன் வேலை செய்யும் பாபு, மணிகண்டன், ரஞ்சித்குமார் ஆகியோர் சேர்ந்து அனில்குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. அதன்பின் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். 

  24 மணி நேரத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்த, சப்-இன்ஸ்பெக்டர்  அமல் ஆரோக்கியதாஸூக்கு எஸ்.பி.. சசாங் சாய் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
  Next Story
  ×