search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கிறிஸ்துமஸ்சையொட்டி திருப்பூர் கடைகளில் விதவிதமான ஸ்டார்கள் விற்பனை

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனைக்கு வந்துள்ளது.
    திருப்பூர்:

    கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் வீடுகளின் முன் வண்ண விளக்குகளால் பல வடிவங்களில் ஸ்டார் அமைத்தல், குடில், கிறிஸ்துமஸ் மரம் அலங்கரித்தல் பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனைக்கு வந்துள்ளது. பேப்பரில் தயாரித்தது ரூ.80 முதல் ரூ.450 வரையும், பிளாஸ்டிக் ஸ்டார் ரூ. 140 முதல் ரூ.400 வரையும் விற்று வருகிறது. இந்தாண்டு புதிதாக எல்.இ.டி., விளக்குகள் பொருத்திய ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை ரூ.180 முதல் ரூ.850 வரை உள்ளது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்:

    ‘கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து நடப்பாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். வீடுகளில் ஸ்டார்கள் ஒரு மாதத்திற்கு முன்பே அலங்கரிக்கப்படுகிறது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.
    Next Story
    ×