என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வானிலையின் தற்போதைய நிலவரப் படம்
  X
  வானிலையின் தற்போதைய நிலவரப் படம்

  தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை-வானிலை ஆய்வு மையம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற நிலையில் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  சென்னை:

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  மேலும், பிற தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கடலோர மாவட்டங்களில், லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மீனவர்கள் கடலுக்கு செல்ல எந்த எச்சரிக்கையும் இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இதையும் படியுங்கள்..  மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய டாக்டர்
  Next Story
  ×