search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்மழை- 135 கண்மாய்கள் நிரம்பின

    பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 500 கண்மாய்கள் உள்ளன. இவற்றில் 135 கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
    ராமநாதபுரம்:

    வைகை அணையில் இருந்து பார்த்திபனூர் தலை மதகு அணைக்கு நேற்றைய நிலவரப்படி 9 ஆயிரத்து 940 கனஅடி வீதம் தண்ணீர் வரத்துள்ளது.

    தலை மதகு அணையில் இருந்து வைகை ஆற்றின் வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு 7ஆயிரத்து 400 கன அடி வீதமும், வலது பிரதான கால்வாயில் 1100 கன அடி வீதமும், இடது பிரதான கால்வாயில் 1200 கன அடிவீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 500 கண்மாய்கள் உள்ளன. இவற்றில் 135 கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    70 சதவீதம் வரை 348 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. பெரிய கண்மாயில் (மொத்தம் 618 மில்லியன் கனஅடி) 390 மில்லியன் கன அடி அளவு தண்ணீர் உள்ளது.

    பாதுகாப்பான முறையில் தொடர்ந்து வைகை ஆற்று தண்ணீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 1 முதல் 30-ந்தேதி வரை 384 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வைகை ஆறு உபரி தண்ணீர் மூலம் 500 கண் மாய்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×