search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் கிலோ ரூ.100 ஆக உயர்வு

    ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.150-க்கும் விற்பனையானது.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது.

    இந்த நிலையில் இன்று 39 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளதால் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் கிலோ ரூ.100-க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் கடந்த சில நாட்களாகவே வரத்து குறைவு காரணமாக பச்சை காய்கறிகளின் விலையும் தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் சில்லரை விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    ஈரோடு வ.உ.சி நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தாளவாடி போன்ற பகுதியில் இருந்து அதிக அளவு காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் வரத்து குறைந்ததால் தக்காளி மற்றும் காய்கறிகள் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரத்து குறைவால் தக்காளி கிலோ ரூ.150 வரை விற்கப்பட்டது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ. 30-க்கு விற்பனைக்கு செய்யப்பட்டது.

    ஆனால் தொடர்ந்து தமிழகம் முழுதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி மற்றும் காய்கறிகள் வரத்து குறைந்து வருகிறது. இதனால் மீண்டும் காய்கறி விலை அதிகரித்து வருகிறது.

    ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.150-க்கும் விற்பனையானது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.30-க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.


    Next Story
    ×