search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறியதை படத்தில் காணலாம்.
    X
    10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறியதை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் குழாய் உடைந்து சாலையில் ஆறு போல் ஓடிய குடிநீர்

    திருப்பூர் மாநகர் பகுதிகளில் குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்தநிலையில் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்க்காக குழிகள் தோண்டப்பட்ட போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. 

    மேலும் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்ததுடன் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது. ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக தண்ணீர் வீணான நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழாய் உடைப்பை சரி செய்தனர். 

    திருப்பூர் மாநகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இப்படி தண்ணீர் வீணாக வெளியேறியது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×