search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

    திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
    பல்லடம்:
     
    பல்லடம் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பொன்.பாரிவேந்தன் கூறியதாவது:

    திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .

    இந்தத்திட்டத்தின் கீழ் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெற மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் வரும் 2022 பிப்ரவரி மாதம் வரை நடைபெற உள்ளது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    மேலும் அதே நாளில் திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 

    எனவே கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் பயன் பெற விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், விவசாய நில ஆவணங்களின் நகல், போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை பெற்று அதனைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

    அவற்றில் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அரசு நிர்ணயம் செய்யப்பட்ட வட்டியில் கடன் தொகை வழங்கப்படும். எனவே கால்நடை வளர்க்கும் விவசாயிகள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×