search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காலிபணியிடங்களை நிரப்ப திட்டம் - திருப்பூரில் போக்குவரத்து பணியாளர்களின் விவரம் சேகரிப்பு

    கோவை கோட்டத்தின் கீழ் திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை உட்கோட்டங்கள் உள்ளன.
    திருப்பூர்:

    அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர், அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்திருந்தார்.

    அதைத்தொடர்ந்து மாநிலத்தில் 8 கோட்டம் மற்றும் அவற்றின் கீழ் உள்ள மண்டலம், கிளைகளில் எவ்வளவு பணியிடம் காலியாக உள்ளது என்ற விபரம் கேட்கப்பட்டுள்ளது. துணை மேலாளர், வணிக மேலாளருக்கு இதுகுறித்து மேலாண்மை இயக்குனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கோவை கோட்டத்தின் கீழ் திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை உட்கோட்டங்கள் உள்ளன. திருப்பூர் மண்டலத்தில் காங்கயம், தாராபுரம், பழனி-1 மற்றும் 2, திருப்பூர்-1,2மற்றும் பல்லடம் ஆகிய 7 கிளைகள் உள்ளன.

    இவற்றில் தற்போதுள்ள பஸ்கள், டிரைவர், நடத்துனர், மாற்றுப்பணிக்கு வரும் டிரைவர், நடத்துனர், சிறப்பு டவுன் சர்வீஸ் பஸ் இயக்கத்தின் போது பணியில் ஈடுபடுவோர், இயக்க, கண்காணிப்பு குழு, தொழில்நுட்ப பணியாளர் மற்றும் காலி பணியிடங்கள் எவ்வளவு உள்ளன உள்ளிட்ட விபரங்களை சேகரித்து பட்டியலாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதற்கான பணிகளில் திருப்பூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர். 
    Next Story
    ×