search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லை போராட்ட தியாகி கலைமணிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அதிகாரிகள் வழங்கிய காட்சி.
    X
    எல்லை போராட்ட தியாகி கலைமணிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அதிகாரிகள் வழங்கிய காட்சி.

    வீடு தேடி சென்று எல்லை போராட்ட தியாகியை கவுரவித்த அதிகாரிகள்

    எல்லைக் காவலர்கள் ஒவ்வொருக்கும்ரூ. 1லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
    திருப்பூர்:

    1956-ம் ஆண்டு இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 

    அவ்வாறு பிரிந்தபோது, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்று தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் நாளை எல்லை போராட்ட தியாகிகள் நாளாக தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

    இந்நாளை அனுசரிக்கும் வகையில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக் காவலர்கள் ஒவ்வொருக்கும்ரூ.1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

    அதன்படி, 20.2.1956-ல் அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற பீர்மேடு எல்லைப்பேராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று தற்போது திருப்பூர் எல்லைக் காவலருக்கான உதவித் தொகையினை பெற்றுவரும் வி.கே. கலைமணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுறுத்தலின்படி, கலைமணியின் இல்லத்திற்குத் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர் அன்புச்செழியன் நேரில் சென்று ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கவுரவித்தார். 
    Next Story
    ×