என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மினி பஸ் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
Byமாலை மலர்30 Nov 2021 12:27 AM GMT (Updated: 30 Nov 2021 12:27 AM GMT)
சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பஸ்கள் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
சென்னையில் மினி பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரெயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 210 மினி பஸ்களில் 66 மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் மினி பஸ் பயணிகளின் பயன்பாடு குறைந்து, நிதி இழப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 144 மினி பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த மினி பஸ்களை சிறந்த முறையில் பயன்படுத்திட பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பஸ்கள் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார். ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ்கல் இயக்கப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்...கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் 5 ஆயிரம் ஆசிரியர்கள்
Next Story
×