search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற காட்சி.
    X
    திருப்பூரில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற காட்சி.

    12வது கட்ட முகாம்- திருப்பூரில் 1லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

    வருகிற 30-ந்தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 19.95 லட்சம் பேரில் தற்போது வரையில் 17.23 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 8.21 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வருகிற 30-ந்தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று 12-வது கட்ட தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. 604 நிலையான மருத்துவ முகாம்கள்,41 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 645 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது-. 

    இதில் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×