search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

    பணி பாதுகாப்பு இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள்தான் அதிக அளவில் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
    திருப்பூர்:

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் அ.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். 

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

    தமிழக மின்சார வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றனர். இதில்  மின்பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகளில் அதிக அளவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் பணியாற்றி வருகின்றனர்.

    இத்தகை சூழ்நிலையில் பணி பாதுகாப்பு இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள்தான் அதிக அளவில் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். தமிழக மின்சார வாரியத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணி காலியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. ஆகவே ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×