search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் தக்காளி விற்பனை நடந்தபோது எடுத்தபடம்
    X
    தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் தக்காளி விற்பனை நடந்தபோது எடுத்தபடம்

    தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் தக்காளி கிலோ ரூ.85-க்கு விற்பனை

    பண்ணை பசுமை அங்காடி விற்பனையை மேலாண்மை இயக்குனர் அந்தோணி பட்டுராஜ் மற்றும் ராஜதுரை ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    தூத்துக்குடி:

    காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு நிறுவனங்களால் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் தூத்துக்குடி, சென்னை, கோவை, மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் மாவட்டங்களில் 65 கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது. இதனால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரம் கார்த்திகை மாதம் பிறப்பு காரணமாக காய்கறிகளின் தேவை அதிகரித்தது. வரத்து குறைந்து தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 140 வரை விற்கப்பட்டு வருகிறது.

    தற்போது காய்கறி விலை உச்சத்தை எட்டி உள்ள நிலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் அதிகளவில் காய்கறிகளை விற்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி வழங்குவதற்காக முதற்கட்டமாக தினசரி ரூ. 15 டன் தக்காளி கொள்முதல் செய்யவும் பின்னர் அதை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இன்று தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் பல்வேறு காய்கறிகள் விற்கப்பட்டது. குறிப்பாக தக்காளி விலை வெளிச்சந்தையில் ரூ. 140 வரை விற்கப்படும் நிலையில் அங்கு ரூ. 85-க்கு விற்பனையானது.

    வெளிச்சந்தையை விட குறைவான விலையில் விற்பனையானதால் ஏராளமான பொதுமக்கள் அதனை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பண்ணை பசுமை அங்காடி விற்பனையை மேலாண்மை இயக்குனர் அந்தோணி பட்டுராஜ் மற்றும் ராஜதுரை ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



    Next Story
    ×