search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜே.ஜே.நகர் பகுதியில் செல்வராஜ் எம்.எல்.ஏ,. ஆய்வு செய்த காட்சி. அருகில் அதிகாரிகள் உள்ளனர்.
    X
    ஜே.ஜே.நகர் பகுதியில் செல்வராஜ் எம்.எல்.ஏ,. ஆய்வு செய்த காட்சி. அருகில் அதிகாரிகள் உள்ளனர்.

    திருப்பூர் ஜே.ஜே.நகர் பகுதியில் செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆய்வு - மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை

    நெடுஞ்சாலைத்துறை வழியாக தண்ணீரை கொண்டு செல்லலாமா? என்று ஆய்வு செய்யப்பட்டது.
    திருப்பூர்:
     
    திருப்பூர் மாநகராட்சி 3-ம் மண்டலத்திற்குட்பட்ட ஜே.ஜே.நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வந்தது. வடிந்து செல்ல வழியில்லாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.  இது குறித்து திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ்க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கு சென்று ஆய்வு செய்தார். 

    அவருடன் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். தண்ணீரை தேங்காமல் வெளியே கொண்டு செல்வதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்தனர். 

    அப்போது அங்குள்ள தோட்டம் வழியாக தண்ணீரை கொண்டு செல்ல தோட்டத்து உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நெடுஞ்சாலைத்துறை வழியாக தண்ணீரை கொண்டு செல்லலாமா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. 

    இதுகுறித்து செல்வராஜ் எம்.எல்.ஏ., கூறுகையில்: 

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜே.ஜே.நகரில் மழை தண்ணீர் தேங்காத வகையில் இருக்க தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் தோட்டம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை வழியாக கொண்டு செல்லலாமா? அதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளது. 

    எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை ஆராய்ந்து திட்டம் வகுத்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வுக்கு வழிவகை செய்யப்படும் என்றார். ஆய்வின் போது திருப்பூர் தெற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் டிகேடி. நாகராஜ், வடக்கு மாநகர் பொறுப்பாளர்  தினேஷ்குமார், நல்லூர் பகுதி செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.  
    Next Story
    ×