search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் மழைகோட் விற்பனை அமோகம்

    மழை கோட், ஜெர்கின்களை குஜராத்தில் இருந்து கொண்டு வந்து திருப்பூரில் 3 இடங்களில் ரோட்டோர கடை அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் தொடர் மழை பெய்து வருகிறது. குளிரும் அதிகரித்து காணப்படுகிறது. மழையில் நனையாமலிருக்கவும், குளிரை சமாளிக்கவும் வாகன ஓட்டிகள் உட்பட பொதுமக்கள் மழைகோட், ஜெர்கின் ,ஸ்வெட்டர் வாங்கி அணிகின்றனர்.

    அதன் தேவையை அறிந்து குறு, சிறு வர்த்தகர்கள் திருப்பூர் - அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் சாலையோர கடைகள் அமைத்து ரெயின் கோட் விற்பனை செய்து வருகின்றனர். 

    பெங்களூருவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்த மழைகோட் மற்றும் ஜெர்கின் ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குளிர் மிகுந்து காணப்படுவதால் மழைகோட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

    மழை கோட், ஜெர்கின்களை குஜராத்தில் இருந்து தருவித்து திருப்பூரில் மூன்று இடங்களில் ரோட்டோர கடை அமைத்து விற்பனை செய்கிறோம். 400 முதல் 600 ரூபாய் மதிப்பிலான மழை கோட், ஜெர்கின் உள்ளன. 

    குறைந்த லாபம் வைத்து அதிக ஆடைகளை விற்பனை செய்யும் வர்த்தக யுத்தியை பயன்படுத்துகிறோம், மழைக்காலம் என்பதாலும் குளிர் அதிகரித்து காணப்படுவதாலும் விற்பனை அமோகமாக உள்ளது. காலை முதல் மாலைக்குள் தினமும் 200 ரெயின் கோட் மற்றும் ஜெர்கின்கள் விற்பனையாகி விடுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×