search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாய ஆலையில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்தப்படம்.
    X
    சாய ஆலையில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்தப்படம்.

    3 பேர் பலியான சாய ஆலையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

    விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்கள் சேகரித்தனர். ஆய்வு முடிந்ததும் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சாய ஆலை செயல்பட்டு வருகிறது. 

    இங்கு கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கியதில் சாய ஆலை மேலாளர் தினேஷ், தொழிலாளி வடிவேல் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தநிலையில் தொழிலாளர்கள் பலியான சாய ஆலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்கள் சேகரித்தனர். ஆய்வு முடிந்ததும் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என தெரிவித்தனர்.
    Next Story
    ×