என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திருப்பூரில் பணம் - செல்போன்களை திருடிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மர்ம ஆசாமிகள் கறிக்கடையில் உள்ள ரூ.5ஆயிரம் பணம், செல்போன் கடையில் உள்ள செல்போன்கள் மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கீரனூர் நால்ரோட்டில் உள்ள கறிக்கடை மற்றும் செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பான புகாரின்பேரில் காங்கயம் போலீசார் விசாரணை நடத்தினர்.

  அப்போது மர்ம ஆசாமிகள் கறிக்கடையில் உள்ள ரூ.5 ஆயிரம் பணம், செல்போன் கடையில் உள்ள செல்போன்கள் மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து காங்கேயம் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். 

  அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்த போது அவர் செல்போன் கடையில் திருடியதை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது அவர் கார்த்தி (வயது27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  Next Story
  ×