search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரி
    X
    புழல் ஏரி

    புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.
    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் நீர் மட்டம் 21.20 அடியாகும். மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.

    இந்நிலையில், தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறக்கப்பட்டது.

    ஏரியில் இருந்து உபரிநீர் கால்வாய் வழியாக திறக்கப்படும் நீரானது செங்குன்றம், சாமியார்மடம், வடகரை, கிரான்ட்லைன், வடபெரும்பாக்கம், கொசப்பூர், மஞ்சம்பாக்கம், மணலி, சடயங்குப்பம் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×