search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை

    தீபாவளி பண்டிகையையொட்டி 3-ந் தேதி ரூ.9 கோடியே 97 லட்சத்திற்கும், 4-ந் தேதி 10 கோடியே 96 லட்சத்திற்கும் என மொத்தம் 2 நாட்களில் மட்டும் ரூ.20 கோடியே 93 லட்சத்திற்கு மது பாட்டில்கள் விற்பனையானது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீபாவளியையொட்டி மது பானங்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சில மது பிரியர்கள் 5 மது பாட்டில்களை வரை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் வழக்கத்தை விட 2 மடங்கு விற்பனை அதிகரித்தது.

    தீபாவளி பண்டிகையையொட்டி 3-ந் தேதி ரூ.9 கோடியே 97 லட்சத்திற்கும், 4-ந் தேதி 10 கோடியே 96 லட்சத்திற்கும் என மொத்தம் 2 நாட்களில் மட்டும் ரூ.20 கோடியே 93 லட்சத்திற்கு மது பாட்டில்கள் விற்பனையானது.

    வழக்கமாக ஒரு நாளைக்கு 5 முதல் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும் நிலையில் கடந்த 2 நாட்களும் ஒரு நாளைக்கு ரூ.10 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வழக்கமான விற்பனையை விட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×