search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு.
    X
    டெங்கு.

    திருப்பூரில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் - சிறுமி பாதிப்பு

    மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பெருமாநல்லூர் சாலையை சேர்ந்த 7 வயது சிறுமி மற்றும் திலகர் நகர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் திருப்பூர் அரசு மருததுவக்கல்லூரி மருத்துவமனை டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

    இதையடுத்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாநகர சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,  வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காதவாறு மக்கள் பார்த்துகொள்ள வேண்டும். கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தை வைத்து கொண்டாலே டெங்கு பாதிப்பு இருக்காது. 

    மழைநீர் தேங்கும் வகையில் உள்ள பயன்பாடில்லாத டயர்கள், தேங்காய் சிரட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். திறந்தநிலை தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உருவாகாத வகையில் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றனர். 
    Next Story
    ×