search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.88½ லட்சம் காணிக்கை வசூல்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காணிக்கையாக ரூ.88 லட்சத்து 53 ஆயிரத்து 488-ம், 2 கிலோ 901 கிராம் தங்கமும், 3 கிலோ 480 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு பணம் 85- ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சமயபுரம் :

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகளை மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கம்.

    அதன்படி இம்மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணைஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகர், திருச்சி உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவில் மேலாளர் ராசாங்கம், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் பிருந்தாநாயகி ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன.

    இதில், காணிக்கையாக ரூ.88 லட்சத்து 53 ஆயிரத்து 488-ம், 2 கிலோ 901 கிராம் தங்கமும், 3 கிலோ 480 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு பணம் 85- ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    Next Story
    ×