search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - பொதுமக்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்

    திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டலங்களுக்கு உட்பட்டு 60 வார்டுகளை கொண்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மண்டல அலுவலகங்களில் நடைபெறும் என ஆணையாளர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

    திருப்பூர் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் பிரதிவாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டலங்களுக்கு உட்பட்டு 60 வார்டுகளை கொண்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, வார்டு 1 முதல் 15 வரை உள்ள பொதுமக்கள் வேலம்பாளையத்தில் உள்ள 1- வது மண்டல அலுவலகத்திலும், வார்டு 16 முதல் 30 வரை உள்ள பொதுமக்கள் நஞ்சப்பா நகரில் உள்ள 2-வது மண்டல அலுவலகத்திலும், வார்டு 31 முதல் 45 வரை உள்ள பொதுமக்கள் நல்லூரில் உள்ள 3-வது மண்டல அலுவலகத்திலும், வார்டு 46 முதல் 60 வரை உள்ள பொதுமக்கள் ஆண்டிபாளையத்தில் உள்ள 4-வது மண்டல அலுவலகத்திலும் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கு பெறலாம்.

    மேலும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

    தொடர்ந்து, பிரதிவாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த மண்டல அலுவலகங்களில் நடைபெறும். எனவே, மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மூலம் பொதுமக்கள் தங்களது முறையான கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×