search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்ட காட்சி.
    X
    மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்ட காட்சி.

    திருப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு

    நகராட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாராக வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படுகின்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நகராட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை  தயாராக வைத்திருக்க வேண்டுமென  உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு இருந்த அறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.

    முதற்கட்ட சரிபார்ப்பு பணி  இன்று தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×