search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் மாநகராட்சி"

    • திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளது.
    • மாநகராட்சி சார்பில் கட்டிட உரிமையாளருக்கு 2 முறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு ஏதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையம் செயல்பட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இப்படி வரி செலுத்த ஏதுவாக மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் வரி செலுத்தாத கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளது. இதனை கட்டுமாறு மாநகராட்சி சார்பில் அந்த கட்டிட உரிமையாளருக்கு 2 முறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் வரி பாக்கி செலுத்தவில்லை. இதனால் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

    • நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.
    • பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 2 நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

    அதனை தொடர்ந்து 3-வது நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 1000 பெண்கள் கலந்து கொண்டு வைக்கக்கூடிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். நொய்யல் நதிக்கரை யோரம் அடுப்புகளை பற்ற வைத்து பொங்கலிட்டனர். பால் பொங்கும் போது குலவையிட்டனர்.


    இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பரதநாட்டியம், சிலம்பம், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களான நொண்டி, பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.

    மேலும் கேரம், செஸ், கைகளில் மெகந்தி வரைதல் , சலங்கையாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகரை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் நொய்யல் பகுதியானது பொதுமக்களின் ஆட்டம் பாட்டத்தால் களை கட்டியது. சமத்துவ பொங்கல் தொடக்க விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டு பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர்.

    • உதவி செயற்பொறியாளர்கள் 4 பேர், உதவி ஆணையாளர்களாக பொறுப்பை கவனித்து வந்தனர்.
    • மேட்டுப்பாளையம் மற்றும் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர்கள் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலத்திலும் உதவி செயற்பொறியாளர்கள் 4 பேர், உதவி ஆணையாளர்களாக பொறுப்பை கவனித்து வந்தனர். இந்தநிலையில் மாநகராட்சிக்கு 2 உதவி ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளராக இருந்த வினோத், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக இருந்த முருகேசன் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சியின் 1-வது மற்றும் 2-வது மண்டல உதவி ஆணையாளராக முருகேசன், 3-வது மற்றும் 4-வது மண்டல உதவி ஆணையாளராக வினோத் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    • 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.
    • மாநகராட்சி கமிஷனர் பவுன் குமார் ஜி.கரியப்பனவர், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில்

    மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளு டன் தொடர்ந்து ஆலோசனை நடத்தியும், பணிகளை நேரடியாக சென்றும் ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை வெள்ளியங்காடு நால்ரோடு மற்றும் 60 அடி சாலையில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.

    அப்போது முடிக்க படாத பணிகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பவுன் குமார் ஜி.கரியப்பனவர், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    • அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
    • ரூ.9,81,994 ஊக்கத்தொகையான 5 சதவீதத்தின்படி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை 30.4.2023க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு தங்களது சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை நாளை 29 ,30-ந்தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை6 மணி வரை செயல்படும்.மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவ லகங்கள்,குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தண ம்பாளையம், வீரபாண்டி, முருகம்பா ளையம், ஆகிய கணிணி வரிவசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ செலுத்தலாம்.எளிய முறையில் இணையதளம் வழியாக வரி செலுத்தும் சேவையைபயன்படுத்த Use "Quick Payment" or "Register &, Login" to https://tnurbanepay.tn.gov.in வழியாக செலுத்தலாம். தொடர்ந்து நேற்று வரை 5,130 நபர்கள் வரிகளை செலுத்தி, சுமார்ரூ.9,81,994 ஊக்கத்தொகையான 5 சதவீதத்தின் படி வழங்க ப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு 2023-24 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரையினை செலு த்தி மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு தங்களது பங்களிப்பினைவழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
    • டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் ேமற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள்2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம்1998 பிரிவு 84(1)ல் அரையாண்டுக்கான சொத்துவரியினை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீத ஊக்கத் தொகை அதிகபட்ச மாகரூ.5,000 வரை வழங்கப்படும்.

    அதன்படி சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல்அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, ஏப்ரல் 30-ந்தேதிக்குள் சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.சொத்துவரியினை, சொத்து உரிமையாளர்கள் செலுத்த பல்வேறு வகைகளான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், குரல் ஒலி அழைப்புகள், திருப்பூர்மாநகராட்சியின் அறிவிப்பு பலகைகளில் சொத்துவரி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு செய்தி வெளியிடுதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், பண்பலை அலைவரிசை மூலம் சொத்துவரி செலுத்தக் கோரி ஒலிப்பரப்பு செய்தல், செய்தித்தாள்களில் விளம்ப ரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சொத்து உரிமையாள ர்கள், சொத்துவரியினை தங்களது இல்லம் தேடி வரும்வரிவசூலிப்பாளர்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்து ள்ள அரசு இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும்வரை வோலை மூலமாகவும், திருப்பூர் மாநகராட்சி இணையதளம், NEFT and RTGS ஆகியவற்றின் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 -ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை யினை பெற்றிடுமாறும், திருப்பூர் மாநகரத்திற்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்க மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்கள்பயன்பாட்டிற்கு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    • கால்வாயினை  தூர்வாரி சுத்தம்செய்ய உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்மண்டலம் -1, வார்டு -22 , பகுதியில் அமைந்துள்ளஉழவர் சந்தை பூங்காவை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மறுசீரமைப்புசெய்து கம்பி வேலிகள் அமைத்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்கள்பயன்பாட்டிற்கு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டிருந்த கழிவு நீர் கால்வாயினைபார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக கால்வாயினை  தூர்வாரி சுத்தம்செய்ய உத்தரவிட்டார்.

    மேலும், உழவர் சந்தையில் உள்ள கழிவறைகள், குப்பை கொட்டும் பகுதிகள்மற்றும் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, "மக்களுடன் மேயர்" திட்டத்தின் கீழ் 29-வது வார்டு பகுதியில்உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.வெ.ராதாகிருஷ்ணன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணிக்கு மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • நிதிக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெறறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நாளை 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.

    பட்ஜெட் கூட்டத்தை முன்னிட்டு நிதிக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நிதிக்குழு தலைவர் கோமதி குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

    • 4 மண்டலங்கள் கொண்ட திருப்பூர் மாநகராட்சியில் 2 மண்டலங்களுக்கு ஒரு துணை ஆணையாளர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.
    • உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இரண்டு துணை ஆணையாளர்கள் பணியிடம் உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த சுல்தானா திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளராகவும், ஓசூர் மாநகராட்சி முன்னாள் ஆணையாளராக இருந்த பாலசுப்பிரமணியன் திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 1 மண்டலத்துக்கு 15 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்கள் கொண்ட திருப்பூர் மாநகராட்சியில் 2 மண்டலங்களுக்கு ஒரு துணை ஆணையாளர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.

    திருப்பூர் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனராக இருந்த ராஜன் சேலம் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி முன்னாள் ஆணையாளராக இருந்த இளங்கோவன் திருப்பூர் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் மாநகராட்சி செயற்பொறியாளராக இருந்த முகமது சபியுல்லா ஆவடி மாநகராட்சியின் கண்காணிப்பு பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

    • வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
    • ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை உரிய நேரத்தில் செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மேலும் வரி செலுத்துமாறு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    இதன்படி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி 1-வது மண்டலத்தில் 6, 2-வது மண்டலத்தில் 16, 3-வது மண்டலத்தில் 9, 4-வது மண்டலத்தில் 15 என மொத்தம் 46 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் சரியான நேரத்தில் வரிகளை செலுத்தி, குடிநீர் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    • எங்களை உறங்க விடாமல் செய்யும் மிகப் பெரிய பிரச்சினையாக திருப்பூரில் குப்பை பிரச்னை உள்ளது.
    • திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயலாற்றிய பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி, மேற்கு ரோட்டரி மற்றும் துப்புரவாளன் அமைப்பு ஆகியன இணைந்து திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு குறும்பட வெளியீடு ஆகிய நிகழ்ச்சியை நடத்தின. துப்புரவாளன் அமைப்பு இயக்குநர் மோகன் வரவேற்றார். அமைப்பாளர் பத்மநாபன் அதன் நோக்கம் குறித்து பேசினார்.

    மாநகராட்சி பகுதியில் நிலவும் குப்பை மற்றும் அவற்றை முறையாக மாற்று வழியில் பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    எங்களை உறங்க விடாமல் செய்யும் மிகப் பெரிய பிரச்சினையாக திருப்பூரில் குப்பை பிரச்னை உள்ளது. நகரின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சேகரமாகும் குப்பை தான் காரணமாக உள்ளது.திடக்கழிவு மேலாண்மையை மக்கள் இயக்கமாக கொண்டு செல்கிறோம். இதில் தன்னார்வ அமைப்புகள் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இவற்றுடன் மக்கள் ஒத்துழைப்பையும் அளித்தால் நிச்சயம் இந்த சவாலை எதிர் கொண்டு சமாளித்து வெற்றி பெற முடியும்.

    குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்கினால், அவற்றை மறு சுழற்சி முறையில், நுண்ணுயிர் உரம், மின்சாரம், இயற்கை எரிவாயு, கட்டுமானப் பொருள் என பல விதங்களில் பயன்படுத்த முடியும். தற்போது 4 வார்டுகளில் செகன்டரி பாயின்ட் என்ற குப்பை குவியும் பகுதி இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது. விரைவில் 60 வார்டுகளிலும் இது நடைமுறைக்கு வரும்.

    வீடுகளில் சேகரமாகும் குப்பை 800 மெட்ரிக் டன் அளவும், தொழிற்சாலை கழிவு மேலும் 600மெட்ரிக் டன். மாதம் சராசரியாக 30 ஆயிரம் மெட்ரிக் டன் சேகரமாகிறது. குப்பைகளை தரம் பிரித்தாலும் அவை ஒன்றாகவே பாறைக்குழிகளில் கொண்டு சேர்க்கப்படுகிறது. நிர்வாகத்துக்கு அதிக செலவும் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பேசு கையில், 'திருப்பூரைப் பொறுத்தவரை வீடு, கடை, ஓட்டல், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள் என அனைத்து விதமான கழிவுகளும் ஒன்று சேர்ந்து சேகரமாகிறது. இதைப் பிரித்து முறையாக மாற்று முறையில் பயன்படுத்தினால் அதை பலன் தரும் விதமாக கையாள முடியும்' என்றார்.துணை மேயர் பாலசுப்ரமணியம், வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயலாற்றிய பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

    • திருப்பூர் மாநகராட்சி சார்பில் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேயர் தினேஷ்குமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,தூய்மை பணியாளர்கள் என 392 பேருக்கு நற்சான்றுகளை மேயர் தினேஷ் குமார் வழங்கினார்.

    திருப்பூர்:

    74 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி சார்பில் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேயர் தினேஷ்குமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றினார்.பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர் மாநகராட்சி சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள், கலை குழுவினர், பள்ளி மாணவ மாணவிகள், நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் என 2250 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என 392 பேருக்கு நற்சான்றுகளை மேயர் தினேஷ் குமார் வழங்கினார்.

    விழாவில் குடியரசு தின சிறப்புரை ஆற்றிய மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் சுத்தம் ,சுகாதாரம், சுற்றுப்புற சூழல் நலம் காக்க திட்டங்களை அறிவித்து அதற்கான நிதியையும் வழங்கி வருகிறார். முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாநகராட்சியின் வசதிகள், பொது சுகாதாரம், கல்வி வளர்ச்சி ,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,திருப்பூர் மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாக மாற்றிடும் வகையில் நாம் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் மக்களின் தேவைகளை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்தில் முதன்மை மாநகராட்சியாக மாற்றும் வகையில் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் மாநகராட்சி யில் உள்ள பூங்காக்களை புனரமைப்பு செய்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வருகிறோம். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் அவர் பேசினார்.

    தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.குடியரசு தின விழாவில் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ,கவுன்சிலர்கள், உதவி கமிஷனர்கள் ,அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×