பராமரிப்பு பணி காரணமாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

இரண்டாவது குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை ,மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகி க்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் இரண்டாவது குடிநீர் திட்டல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. அதனால் 2 வது குடிநீர் திட்டத்தில்குடிநீர் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்கு உட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு 44, 45, 50, 51 மற்றும் மண்டலம் 4-க்கு உட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் நாளை மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com