search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சியின் மேம்பாட்டுக்கு ரூ.400கோடியில் திட்டங்கள்   - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
    X

     வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்ற காட்சி.

    திருப்பூர் மாநகராட்சியின் மேம்பாட்டுக்கு ரூ.400கோடியில் திட்டங்கள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

    • திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது .
    • முதன்மை மாநகராட்சியாக கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    திருப்பூர் :

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது . இதில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு ஆர்வி., நகர் பகுதியில் நடைபெற்ற வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

    அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ. 101 கோடி மதிப்பீட்டில் 1036 பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் படிப்படியாக மக்களின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் மேம்படுத்தப்படும் எனவும் 21 மாநகராட்சிகளில் திருப்பூர் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக கொண்டுவருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    பின்னர் பொதுமக்களிடம் பேசிய மாநில செய்தி துறை அமைச்சர் மு .பெ .சாமிநாதன், அரசு அறிவிக்கும் திட்டங்களை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று இல்லாமல் மக்களும் அதனை தொடர்ந்து கண்காணித்து அதில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பல்திவேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் , திருப்பூர் மாநகராட்சியின் மேம்பாட்டுக்காக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட திட்டங்களை மேம்படுத்த சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டு தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

    Next Story
    ×