search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    4 வழிச்சாலை திட்டத்திற்காக மடத்துக்குளம் கிராமப்பகுதியில் பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்

    கிராமங்களுக்கு மத்தியில் இந்த சாலை செல்வதால் மைவாடி, சின்னப்பன்புதூர், வேடபட்டி உள்ளிட்ட பல இடங்களில் கிராம சாலைகள் குறிக்கிடுகின்றன.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் தாலுகா மைவாடி, வேடபட்டி, கழுகரை உள்ளிட்ட கிராமப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு மத்தியில் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை செல்லும் இந்த பாதை ரூ.3,649 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது.

    உடுமலை, மடத்துக்குளம் நகரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் கிராமங்களின் ஓரங்களில் வாகனங்கள் பயணிக்கும் விதமாகவும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் வடக்கு திசையில் இந்த நான்கு வழிச்சாலை கட்டமைக்கப்படுகிறது.

    கிராமங்களுக்கு மத்தியில் இந்த சாலை செல்வதால் மைவாடி, சின்னப்பன்புதூர், வேடபட்டி உள்ளிட்ட பல இடங்களில் கிராம சாலைகள் குறிக்கிடுகின்றன. இந்த சாலைகளில் தினமும் பல 100 வாகனங்கள் சென்று திரும்புகின்றன. 

    இந்தப்பகுதியில் உள்ள கிராம மக்களின் முக்கிய வழித்தடமாக இந்த சாலைகள்  உள்ளன. இதனால் இந்த போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கிராம சாலைகள் உள்ள இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
    Next Story
    ×