search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    கள் - புகையிலை பொருட்கள் விற்ற 2பேர் கைது

    அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என பல்லடம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    பல்லடம்:

    பல்லடம் மங்கலம் ரோடு கல்லம்பாளையத்தில், சட்டவிரோதமாக மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கல்லம்பாளையம் பகுதியில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மேற்கு தோட்டத்தில், கார்த்திக்(வயது 35)  என்பவர் மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. 

    இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என பல்லடம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

    அப்போது பல்லடம் அருகே உள்ள அருள்புரம், பாச்சாங்காட்டுபாளையத்தில்  முருக வடிவேல் என்பவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 30 பாக்கெட் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முருக வடிவேலை கைது செய்து 30 குட்கா பாக்கெட்டுகளை, பல்லடம் போலீசார் பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×