search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் - லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

    6 மாதத்துக்குள் லிட்டருக்கு ரூ.15க்கு டீசல் விலை உயர்ந்துள்ளது. தொடர் டீசல் விலை உயர்வு லாரி தொழிலில் உள்ளவர்களை கடுமையாக பாதித்துள்ளது.
    திருப்பூர்:

    நடப்பாண்டு ஏப்ரல் மாதம் லிட்டர் ரூ.86.57ஆக இருந்த டீசல் விலை ஜூலை ரூ.94.35,ஆகஸ்டு 95.32 ஆகவும் உயர்ந்தது. ஒரு வாரமாக தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து நேற்று முன்தினம் லிட்டர் 100.08 ஆக உயர்ந்தது. இதனால் லாரி உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சின்னசாமி கூறியதாவது:

    6 மாதத்துக்குள் லிட்டருக்கு ரூ.15க்கு டீசல் விலை உயர்ந்துள்ளது. தொடர் டீசல் விலை உயர்வு லாரி தொழிலில் உள்ளவர்களை கடுமையாக பாதித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. 

    ரூ.42 ஆயிரத்து 300ஆக இருந்த லாரி டயர் விலை தற்போது ரூ.46 ஆயிரத்து 200ஆக உயர்ந்துள்ளது. இப்போது டீசல் ரூ.100ஐ தாண்டிவிட்டது. டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு பதில் மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×