search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நொய்யல் ஆற்றில் சுத்திகரிப்பு தண்ணீர் - விவசாயிகள் வலியுறுத்தல்

    சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீராக இருந்தாலும் குளம், குட்டைகளுக்கு முறை வைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
    திருப்பூர்:

    கோவை நகரப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நொய்யலில் விடப்படுகிறது. ரசாயன கழிவுநீர் கலந்து வருவதால் கிணற்று தண்ணீர் விவசாயத்துக்கு உதவாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தென்னை மரத்தை தவிர மற்ற பயிர்கள் விளைவதில்லை. மாநகராட்சிக்கு கிழக்கே உள்ள பேரூராட்சி, நகராட்சிகள், ஊராட்சிகள் ஆற்றுப்படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஒண்டிப்புதூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை சுத்தம் செய்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இதனால் நொய்யல் படுகை விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரை தடுத்தால் ஒரத்துப்பாளையம், சின்னமுத்தூர் வரையில் வறட்சி ஏற்படும். சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீராக இருந்தாலும் குளம், குட்டைகளுக்கு முறை வைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட கிணறுகள், விவசாய நிலங்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு பாதிப்பு செய்துவிட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வேறு பகுதிக்கு ஆதாய நோக்கத்துடன் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மங்கலம் - பூமலூர் பகுதி விவசாயிகள் அமைச்சர் சாமிநாதனை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

    கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சுத்திகரிப்பு செய்த தண்ணீரை ஆற்றில் விட வேண்டும். இதனால் குளம், குட்டைகளும், நீராதாரமும், விரைவாக மாசு நீங்கி புதுமை பெறும். 

    கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் சீராக்கப்படும். கோவை மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வேறு பகுதிக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். சுத்திகரித்த கழிவுநீரை நொய்யல் ஆற்றிலேயே விடும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×