search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதி சகதிக்காடாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதி சகதிக்காடாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் பெய்த மழையால் சகதிக்காடாக மாறிய சாலைகள் - தெருக்கள்

    நேற்று திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இதையடுத்து நேற்று மதியம் 1.30 மணியளவில் திருப்பூர் மாநகர் பகுதியில் லேசான தூரலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  

    பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து வெளியேறியதால் கடும் துர்நாற்றம் வீசியது.
    திடீரென மழை பெய்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண் டிய இடங்களுக்கு குடை பிடித்தப்படி சென்றனர். திருப்பூர் மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.  மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

    இருப்பினும் திருப்பூர் மாநகர் பகுதியில் பல் வேறு இடங்களில் சாலைகள் சகதிக்காடாக காட்சியளிக்கின்றன.பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் பெயர்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

    எனவே அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் லேசான தூரலுடன் பெய்ய ஆரம் பித்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறி பெய்தது.இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. 

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு 2-ம் ரெயில்வே கேட் பகுதியில் தேங்கி கிடந்த மழைநீர் அகற்றப்படும் காட்சி.
    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு 2-ம் ரெயில்வே கேட் பகுதியில் தேங்கி கிடந்த மழைநீர் அகற்றப்படும் காட்சி.

    கடந்த 10 நாட்களுக்கு முன் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில்  நகராட்சி, மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் ஓடைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்ட து. அதனால் பெரிய அளவில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை. இருந்தபோதிலும் அண்ணா நகர், பனப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியில் குட்டை தோட்டம், சம்பளத்தோட்டம், உள்ளிட்ட சில இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் பலத்த காற்றினால் சாய்ந்தன. ஒவ்வொரு தோட்டத்திலும் சுமார் 10 முதல் 30 வாழை மரங்கள் வரை சாய்ந்து சேதம் ஆனதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    பல்லடம் பாரதிபுரம் பகுதியில் மழையுடன் ஏற்பட்ட மின்னலால் சுமார் 10- க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் பழுதடைந்தன. 
    Next Story
    ×