search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேசிய விளையாட்டு போட்டிகள் விவரம் வெளியீடு

    4-வது வாரம் மகாராஷ்டிராவில் மல்லர் கம்பம் போட்டி நடக்கிறது.
    திருப்பூர்;

    சர்வதேச போட்டிகளுக்கான வீரர், வீராங்கனைகளை உருவாக்க தேசிய போட்டிகளை மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து, எஸ்.ஜி.எப்.ஐ., ( இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு ) ஆண்டுதோறும் நடத்துகிறது.

    தற்போது தொற்று பரவல் குறைந்து தனிநபர் குழு போட்டிகளை நடத்திக் கொள்ள அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தேசிய போட்டியை நடத்தும் மாநிலங்கள் குறித்த விபரத்தை எஸ்.ஜி.எப்.ஐ., வெளியிட்டுள்ளது.

    வரும் டிசம்பர் முதல் வாரம் ஒடிசாவில் கால்பந்து, ஜார்க்கண்டில் வாலிபால், மத்தியபிரதேசத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இரண்டாவது வாரம் சட்டீஸ்கரில் கபடி, புதுடெல்லியில் டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, நீச்சல், பீகார், அசாமில் பளு தூக்குதல் போட்டி நடக்கிறது. 

    4-வது வாரம் மகாராஷ்டிராவில் மல்லர் கம்பம் போட்டி நடக்கிறது. அடுத்த ஆண்டு (2022) ஜனவரி இரண்டாவது வாரம் திரிபுராவில் யோகா, டெல்லியில் ஜூடோ, ஜிம்னாஸ்டிக், குஜராத்தில் ஹேண்ட்பால், சட்டீஸ்கரில் கோ-கோ, ஓடிசா, ஹரியானாவில் ஆக்கி உள்ளிட்ட 34 வகை போட்டி நடக்கவுள்ளது.

    இந்த போட்டிகள் நடத்தும் பட்டியலில் தமிழகத்தில் எந்த போட்டியும் நடத்தவில்லை. கூடுதல் விபரங்களை, www.school games dfederationof india.in என்ற இணையதளத்திலும், 7520065722 என்ற வாட்ஸ்அப்பிலும் அணுகலாம் என திருப்பூர் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கோப்புபடம் 
    Next Story
    ×