என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் - இணையதளத்தில் தெரிந்து கொள்ள வசதி
Byமாலை மலர்10 Oct 2021 2:50 AM GMT (Updated: 10 Oct 2021 2:50 AM GMT)
தென்மாவட்ட ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டதை இணையதளத்தில் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, இந்த ரெயில்கள் ஒரு சில ரெயில் நிலையங்களில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1-ந் தேதி முதல் தென்மாவட்ட ரெயில் போக்குவரத்து நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06723/06724), தாம்பரம்-நாகர்கோவில் (வ.எண்.06191/06192), மதுரை-புனலூர் (வ.எண்.06729/06730), கன்னியாகுமரி-ராமேசுவரம் (வ.எண்.06166), திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி (வ.எண்.02627/02628), கோவை-நாகர்கோவில் நள்ளிரவு எக்ஸ்பிரஸ், (வ.எண்.02668), கோவை-நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ், (வ.எண்.06321/06322), மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் (வ.எண்.06343/06344), பெங்களூரு-நாகர்கோவில் (வ.எண்.0723207236),
கன்னியாகுமரி-சென்னை (வ.எண்.02633/02634), குருவாயூர்-சென்னை (வ.எண்.06127/06128), சென்னை-கொல்லம் (வ.எண்.06101/06102), நாகர்கோவில்-மும்பை (வ.எண்.06339/06340), கன்னியாகுமரி-நிஜாமுதீன் (வ.எண்.06011/06012), கன்னியாகுமரி-ஹவுரா (வ.எண்.02665/02666) உள்ளிட்ட ரெயில்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றத்தை உறுதி செய்ய, மத்திய அரசின்https://enquiry.indianrail.gov.in/mntesஎன்ற இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
அத்துடன், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் 139 என்ற தொலைபேசி எண் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
Next Story
×